திருவனந்தபுரம் : கன்னியாகுமரி மாவட்ட எல்லையான காரக்கோணத்தில் சி.எஸ்.ஐ. மருத்துவக்கல்லுாரி மாணவர்களிடம் அதிக நன்கொடை வாங்கியதாக எழுந்த புகாரையடுத்து திருவனந்தபுரம் சி.எஸ்.ஐ. பிஷப் வீடு அலுவலகம் மற்றும் கல்லுாரியில் மத்திய அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் நன்கொடை வசூலிப்பதாக புகார் எழுந்தது. மாணவர்களின் பெற்றோர் வெள்ளறடை போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து கல்லூரி இயக்குனர் பென்னட் ஆபிரகாம் சி.எஸ்.ஐ. பிஷப் தர்மராஜ் ரசாலம் உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பின் குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.
இதையும் படிக்க | Press Release No : 1219 From Tamil Nadu Institute of Labour Studies - UG, PG and Post Graduate Diploma Courses - PDF
குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பிஷப் தர்மராஜ் ரசாலத்தின் பெயர் நீக்கப்பட்டது.இதனால் இவ்வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க உத்தரவிட கோரி மோகனன் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். உயர்நீதிமன்றம் உத்தரவின்படி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியது. விசாரணையில் அந்நிய செலாவணி சட்டத்தை மீறி பெருமளவு கருப்புப்பணத்தை பல்வேறு இடங்களில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலி வவுச்சர்களை தயாரித்து ரூ.கோடிக்கணக்கில் முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சம்மன் அனுப்பியும் அமலாக்கத்துறை விசாரணைக்கு யாரும் ஆஜராகவில்லை.இ
ந்நிலையில் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள பிஷப் தர்மராஜ் ரசாலம் வீடு, அலுவலகம், காரக்கோணம் மருத்துவக்கல்லூரி, சி.எஸ்.ஐ. சபை செயலாளர் பிரவீனின் வீடு ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறையினர் சோதனையை துவங்கினர்.
இதையும் படிக்க | "பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களை தவிர்க்க வேண்டும்" - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
இரவிலும் இது நீடித்தது. பிஷப் தர்மராஜ் ரசாலம் வீட்டில் இருந்தார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது. பிஷப் நேற்று லண்டனுக்கு செல்ல இருந்த நிலையில் அதற்கு முன் சோதனை துவங்கியது. சி.எஸ்.ஐ. சபை செயலாளர் பிரவீன் நேற்று முன் தினம் இரவே குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் இருந்து வெளியேறி விட்டதாக அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்தது.

No comments:
Post a Comment