பள்ளிகள் இயங்காது சங்க தலைவர் அறிவிப்பு; தனியார் பள்ளிகளை எச்சரிக்கிறது பள்ளி கல்வி இயக்குனரகம் - Daily Dhuniya

Breaking

Sunday, July 17, 2022

பள்ளிகள் இயங்காது சங்க தலைவர் அறிவிப்பு; தனியார் பள்ளிகளை எச்சரிக்கிறது பள்ளி கல்வி இயக்குனரகம்

கள்ளக்குறிச்சி பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் நாளை முதல் சில நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என, தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்சி நர்சரி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அதிரடியாக அறிவித்தார்.

தமிழகத்தில் நாளை ஒருநாள் தனியார் பள்ளிகள் இயங்காது: தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் நலசங்க பொதுச் செயலாளர் அறிவிப்பு

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை திங்கள்கிழமை ஒருநாள் இயங்காது என தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.எஸ்.குடியரசு கூறியது: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கன்னியாமூரில் உயிரிழந்த தனியார் பள்ளி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விவகாரத்தில் காவல்துறையினரும், கல்வித்துறை அதிகாரிகளும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தனர். அந்த அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பெற்றோர் என்ற போர்வையில் சமூக விரோதிகள் பலர் பள்ளிக்குள் நுழைந்து பள்ளி வாகனங்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர். மேலும், அப்பள்ளியில் பயிலும் 5000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

பள்ளியில் நுழைந்து உடைமைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வலியுறுத்தியும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் நாளை திங்கள் கிழமை ஒருநாள் தனியார் பள்ளிகள் தமிழ்நாடு முழுவதும் இயங்காது.

விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்ட நபர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒருங்கிணைந்த தாளாளர் சங்கக் கூட்டமைப்பு முழு ஆதரவு அளிக்கும். விசாரணை முடியும் வரை பள்ளிக்கும், பள்ளி உடைமைக்கும் அரசு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார். பள்ளிகள் மீது நடவடிக்கை

அதே நேரத்தில் விதிகளை மீறி விடுமுறை அளித்தால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், விதிகளை மீறி விடுமுறை விட்டால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பள்ளிகள் வழக்கம்போல பள்ளிகள் செயல்பட வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர்கள் இயக்குனர் கருப்புசாமி அறிவுறுத்தியுள்ளார். இதனால் பெற்றோர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment