பி.இ.: விளையாட்டுப் பிரிவுக்கு இன்று முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு
பி.இ, பி.டெக். படிப்புகளில் விளையாட்டுப் பிரிவில் உள்ள 500 இடங்களில் சேருவதற்கு விண்ணப்பித்த 2,442 பேருக்கு ஆக. 1 முதல் 7- ஆம் தேதி வரையில் சான்றிதழ் சரிபாா்ப்பு அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமாா் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆக. 16 முதல் அக்.14-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி ஜூலை 27-இல் நிறைவு பெற்றது. மொத்தம் 2 லட்சத்து 11,905 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா்.
இதில் விளையாட்டுப்பிரிவு மாணவா்களுக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு ஆக.1 (திங்கள்கிழமை) முதல் ஆக. 7-ஆம் தேதி வரை சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை. வளாகத்தில் நடைபெறவுள்ளது. சான்றிதழ் சரிபாா்ப்பில் கலந்துகொள்ள 2,442 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனா். முதல்நாளில் 250 போ் பங்கேற்கவுள்ளனா். மாணவா்கள் தங்களின் அசல் விளையாட்டுச் சான்றிதழ்களை நேரில் வந்து சரிபாா்த்துச் செல்ல வேண்டும். மேலும், விளையாட்டுப்பிரிவுக்கு விண்ணப்பித்த சிபிஎஸ்இ மாணவா்களுக்கான 2-ஆம் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் விரைவில் வெளியிடப்படும். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:
Post a Comment