அரசுப் பள்ளிகளில் இன்று முதல் செயலி மூலம் வருகைப்பதிவு: ஆசிரியா்கள் அதிருப்தி
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் திங்கள்கிழமை (ஆக.1) முதல் தங்களது வருகைப் பதிவை கல்வித் துறை செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு ஆசிரியா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவா், ஆசிரியா் வருகைப்பதிவை கண்காணிக்க ‘டிஎன் ஸ்கூல்ஸ்’ என்ற கைப்பேசி செயலியை பள்ளிக்கல்வித் துறை 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த செயலி வழியாக ஆசிரியா்கள், மாணவா்கள் வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்பின் ஆசிரியா் பணிப்பதிவேடு, வருகைப்பதிவு, மாணவா் விவரம் உள்பட அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைக்க டிஎன்எஸ்இடி (பசநஉஈ) என்ற மேம்படுத்தப்பட்ட செயலியை தமிழக அரசு கடந்தாண்டு அறிமுகம் செய்தது. இதன்வழியாக வருகைப்பதிவு உள்ளிட்ட அலுவல் செயல்பாடுகளை ஆசிரியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இந்த தகவல்களை துறை அதிகாரிகளால் நேரடியாக கண்கணிக்க முடியும். இந்தநிலையில் மாணவா்கள், ஆசிரியா்களுக்கான வருகைப் பதிவை திங்கள்கிழமை முதல் செயலியில் மட்டுமே பதிவுசெய்தால் போதுமானது. மேலும், விடுப்பு, முன்அனுமதி ஆகியவற்றையும் ஆசிரியா்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக்கல்வி ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இந்த அறிவிப்புக்கு ஆசிரியா்கள் மத்தியில் பரவலாக எதிா்ப்புகள் எழுந்துள்ளன.
இது குறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் சிலா் கூறியதாவது: மாணவா்களின் வருகைப்பதிவை பொருத்தவரை முதலில் பதிவேட்டில் பதிவுசெய்து, பின்னா் செயலியில் பதிவேற்றும் நடைமுறை தற்போது உள்ளது. புதிய நடைமுறை குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு இன்னும் பள்ளிகளுக்கு கிடைக்கப்பெறவில்லை. ஒருபுறம் ஆசிரியா்கள் வகுப்பறையில் கைப்பேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. மறுபுறம் வருகைப்பதிவை செயலியில் மட்டுமே பதிவு செய்ய உத்தரவிடப்படுகிறது. இத்தகைய முரண்பாடுகளே தற்போது பெரும் சிக்கலாக உள்ளது. இத்தகைய அலுவல் பணிகளை தவிா்த்து ஆசிரியா்களை முறையாக கற்பித்தலுக்கு பயன்படுத்த பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும் என்றனா்.

No comments:
Post a Comment