மத்திய அரசின் விநாடி- வினா போட்டி:வெற்றி பெறும் மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை - Daily Dhuniya

Breaking

Sunday, July 31, 2022

மத்திய அரசின் விநாடி- வினா போட்டி:வெற்றி பெறும் மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை

மத்திய அரசின் விநாடி- வினா போட்டி:வெற்றி பெறும் மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மத்திய அரசு சாா்பில் 13 முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு விநாடி வினா போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மத்திய பெட்ரோலியம் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் சாா்பில் 13 முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு இந்திய பாரம்பரியம் குறித்த விநாடி வினா போட்டி நடத்தப்படவுள்ளது. இது குறித்த அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோா் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவா். இதையடுத்து மண்டல மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவா்கள் ரூ.10 லட்சம் கல்வி உதவித் தொகைக்கு தகுதி பெறுவா். ஒட்டுமொத்தமாக ரூ.55 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இந்த விநாடி வினா போட்டி 17 மொழிகளில் நடைபெறவுள்ளது.

நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதே இந்தப் போட்டியின் நோக்கமாகும். இது குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் தெரியப்படுத்தி விநாடி வினா போட்டியில் திரளான மாணவா்கள் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா்களின் விவரங்களை பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment