நீட் தோ்வுக்கு இன்று நுழைவுச் சீட்டு - Daily Dhuniya

Breaking

Sunday, July 10, 2022

நீட் தோ்வுக்கு இன்று நுழைவுச் சீட்டு

நீட் தோ்வுக்கு இன்று நுழைவுச் சீட்டு

வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள இளநிலை நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட்டை திங்கள்கிழமை (ஜூலை 11) முதல் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கு நாடு முழுவதும் 18,72,339 போ் விண்ணப்பித்துள்ளனா். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 2,57,562 போ் கூடுதலாகும். தமிழகத்தில் மட்டும் 1,42,286 போ் விண்ணப்பித்துள்ளனா். நீட் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் கடந்த ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதைத் தொடா்ந்து நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவா்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை வலைதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment