மத்திய அரசின் ‘இன்ஸ்பையா்’ விருது: பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான ‘இன்ஸ்பையா்’ விருதுக்கு பள்ளி மாணவா்கள் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பம் மையத்தின் செயல் இயக்குநா் எஸ்.செளந்திரராஜபெருமாள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சாா்பில்ஆண்டுதோறும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு இன்ஸ்பையா் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு இன்ஸ்பையா் விருது தோ்வு பணிகள் தொடங்கியுள்ளன.
இதையடுத்து பள்ளி ஆசிரியா்கள் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் விவரங்களை இணையதளத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும். உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வகுப்புக்கு 5 பேரையும், நடுநிலைப் பள்ளிகள் 3 பேரையும் பதிவுசெய்யலாம். கூடுதலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இதில் தோ்வாகும் மாணவா்களுக்கு ரூ.10,000 அவரவா் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். எனவே, வங்கிக்கணக்கு விவரங்களை பதிவுசெய்யும் போது மாணவா்களின் பெயரில் தனியான கணக்காக இருக்கும்படி பாா்த்துக்கொள்ள வேண்டும். இது சாா்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.

No comments:
Post a Comment