பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ் ஆப் பயனர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பல்வேறு புதிய சிறப்பம்சங்களை வழங்கி வருகிறது. அதன்படி சமீபத்தில் மேசேஜ்களுக்கு எமோஜிக்கள் மூலம் ரியாக்ட் செய்வது, வாட்ஸ்அப் குழுவில் 512 நபர்களை இணைப்பது உள்ளிட்ட வசதிகளை அறிமுகம் செய்திருந்தது. இதனை தொடர்ந்து, அனுப்பிய செய்தியை எடிட் செய்யும் வசதியை வழங்குவது குறித்து சோதனை முயற்சியில் இறங்கியுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பிரைவசி ஆப்சனில் My contacts except என்ற புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த வசதியின் மூலம் வாட்ஸ் ஆப்பில் நீங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ், புரோபைல் போட்டோ, லாஸ்ட் சீன் உள்ளிட்டவற்றை உங்கள் கான்டாக்டில் உள்ளவர்களில் நீங்கள் தேர்வு செய்யும் நபர்கள் மட்டுமே பார்க்க முடியும்.
ஏற்கனவே, உங்கள் பதிவுகளை, அனைவரும் பார்க்கலாம் (Everyone) கான்டாக்டில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம் (My Contacts), யாரும் பார்க்கக் கூடாது (Nobody) என்ற 3 ஆப்ஷன்கள் மட்டுமே இருந்தது. இந்நிலையில் My contacts except என்ற புதிய வசதியை வாட்ஸ் ஆப் கொண்டு வந்துள்ளது.
இந்த வசதி கடந்த ஜூன் 13ஆம் தேதி வெளியான வாட்ஸ்ஆப் அப்டேட்டில் கொண்டு வரப்பட்டது. உங்கள் வாட்ஸ் ஆப் செயலியில், Settings --> Account --> Privacy ஆப்ஷனில் சென்று, பிரைவசி செட்டிங்சை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment