‘எண்ணும் எழுத்தும்’ திட்ட மாதிரி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் ஜூன் 27-ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) சாா்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் 2025-ஆம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவா்கள் அடிப்படை கணிதத் திறனுடன் பிழையின்றி எழுதுவதை, படிப்பதை உறுதி செய்ய ‘எண்ணும், எழுத்தும்’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்படுகின்றன. அதன்படி, எண்ணும் எழுத்தும் திட்ட மாதிரி வகுப்புகள் ஜூன் 27-ஆம் தேதி முதல் கல்வித் தொலைக்காட்சியில் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும். மேலும், வழிகாட்டுதல்களை பின்பற்றி ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Saturday, June 25, 2022
Home
Ennum Ezhuthum
Kalvi TV
கல்வித் தொலைக் காட்சியில் ‘எண்ணும் எழுத்தும்’ வகுப்பு: ஜூன் 27 முதல் காணலாம்
கல்வித் தொலைக் காட்சியில் ‘எண்ணும் எழுத்தும்’ வகுப்பு: ஜூன் 27 முதல் காணலாம்
Tags
# Ennum Ezhuthum
# Kalvi TV
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Kalvi TV
Tags:
Ennum Ezhuthum,
Kalvi TV
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment