அரசு பள்ளியில் மாணவர்களுடன், முதல்வர் ஸ்டாலின் அமர்ந்து கவனித்த வகுப்பில், 10வது மாணவர்களுக்கு, ஒன்றாம் வகுப்புக்கான பாடம் நடத்தியதால் சர்ச்சை எழுந்து உள்ளது.
'எண்ணும் எழுத்தும்' என்ற திட்டத்தின் துவக்க விழா, சென்னை அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்தார். இலக்கணத்தின் வகை
பின், திருவள்ளூர் மாவட்டம், வடகரை அரசு ஆதிதிராவிடர் நலத் துறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்தார். அப்போது, 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அறைக்குள் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு பின்வரிசையில் உள்ள பெஞ்சில், மாணவர்கள் அருகில் அமர்ந்தார். அவருக்கு பின் இருக்கையில், பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் அமர்ந்தார். அங்குள்ள தமிழாசிரியையிடம், 10ம் வகுப்பு பாடம் நடத்துமாறு கூறினார்.
அப்போது தயாராக இருந்த தமிழாசிரியை, இலக்கணத்தின் வகை குறித்து, பாடம் எடுத்தார். அப்போது, மாணவர்களுக்கு தமிழில் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் எத்தனை என்பதை கூறினார். 'உயிர் எழுத்துக்கள் எத்தனை?' என, மாணவர்களிடம் ஆசிரியை கேட்டார். மாணவர்கள் தயங்கியதை பார்த்து, '12 எழுத்துகள்' என்றார். புகைப்படம்
இதையடுத்து, மாணவர்கள் மத்தியில் அமர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பாடத்தை கவனிப்பதை, அமைச்சர் மகேஷ், மொபைல் போனில் புகைப்படம் எடுத்தார். அவர் புகைப்படம் எடுத்ததும், முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டார்.
இந்த காட்சி, நேற்று சமூக வலைதளங்களில் பரவியது.அதாவது, முதல்வர் ஆய்வு செய்த அரசு பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒன்றாம் வகுப்புக்கான உயிர் எழுத்து, மெய் எழுத்துக்கள் குறித்து, பாடம் நடத்தப்பட்டதால், பெற்றோரும், கல்வியாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment