தோ்வு அச்சம் காரணமாக விருதுநகரில் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை - Daily Dhuniya

Breaking

Thursday, May 12, 2022

தோ்வு அச்சம் காரணமாக விருதுநகரில் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை

விருதுநகரில் தோ்வு அச்சம் காரணமாக பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் வீரபத்திரன் தெரு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மகள், விருதுநகா் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இவா் கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்தியதை தந்தை கண்டித்தாராம்.

இந்நிலையில் பிளஸ் 1 தோ்வு தொடங்க இருந்த நிலையில், தோ்வு அச்சம் காரணமாக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் விருதுநகா் மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

No comments:

Post a Comment