தஞ்சாவூர் தமிழ் பல்கலை.யில் போலி சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு!: தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் முறைகேடு அம்பலம் - Daily Dhuniya

Breaking

Thursday, May 12, 2022

தஞ்சாவூர் தமிழ் பல்கலை.யில் போலி சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு!: தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் முறைகேடு அம்பலம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பதவி உயர்வு பெற்ற 7 பேர் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ் பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வு பெற்ற அனைவரின் ஆவணங்களையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்ற வழக்கறிங்கர் நெடுஞ்செழியன், அதில் 7 பேர் தட்டச்சு படித்ததாக கொடுத்த சான்றிதழ் போலியானது என்று பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் இழுத்தடிப்பதாக கூறி தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்ககத்தில் நெடுஞ்செழியன் முறையிட்டார். இதனை பரிசீலனை செய்த தொழில்நுட்ப இயக்ககம், சம்பந்தப்பட்ட 7 பேரின் சான்றிதழ் பற்றி விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. ஆனால் உரிய விளக்கம் அளிக்க தவறியதால் 7 பேரின் சான்றிதழையும் ரத்து செய்து தொழில்நுட்ப இயக்ககம் உத்தரவிட்டிருந்தது. போலி சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்ற சரவணன், சக்தி சரவணன், சண்முகவடிவு, நிர்மலா, அன்பரசன், வெங்கடேசன் மற்றும் செல்வராஜ் ஆகிய 7 பேர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்செழியன் வலியுறுத்தியுள்ளார். இந்த முறைகேட்டை மூடி மறைக்க பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சி செய்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் பணியாற்றிக்கொண்டே ஆரணி, ஆற்காடு, திருவண்ணாமலையில் உள்ள தனியார் பயிற்சி நிலையத்தில் பயின்று தட்டச்சு படிப்பு முடித்ததாக சான்றிதழ் பெற்றதே பிரச்சனைக்கு காரணம். மூன்று மாதங்கள் பயிற்று நிலையத்தில் நேரடியாக பயில வேண்டும் என்ற விதிகள் உள்ள நிலையில், விடுப்பு எடுக்காமல் எவ்வாறு 7 பேரும் குறிப்பிட்ட பயிற்சி நிலையத்தில் தட்டச்சு பயின்றனர் என்ற கேள்வி எழுந்ததே நடவடிக்கைக்கு காரணம்.

No comments:

Post a Comment