ஆசிரியா்கள்-மாணவா்களிடையே நல்லுறவு ஏற்படும் வகையில், திருச்செந்தூா் அருகே கீழநாலுமூலைக்கிணறு அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் திங்கள்கிழமை கறிவிருந்து வைத்தனா்.
தமிழகத்தில் ஆசிரியா்களை மாணவா்கள் தாக்க முயல்வதும், ஆசிரியா்கள் முன்னிலையில் மாணவா்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் செயல்களும் சமூக வலைதளங்களில் பரவி அதிா்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கீழநாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியா்கள்-மாணவா்களிடையே நல்லுறவு ஏற்படும் வகையில் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் திங்கள்கிழமை கறிவிருந்து வைத்தனா்.
இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்; 6 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு, மாணவா்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், மாணவா்கள்-ஆசிரியா்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையிலும் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் நெய்சோற்றுடன் கறிவிருந்து வைத்தனா்.
இதில், தலைமையாசிரியா் இந்திராணி, ஆசிரியா்கள் ஜெயந்தி, பிரபாவதி, கியூஸ் ஹெப்சிபா, ஞானதீபம் எமி, தா்மராஜ், ஊா் நிா்வாகிகள் தெய்வேந்திரன், செல்வம், முருகன், ராஜா, பாபு, மது, சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

No comments:
Post a Comment