''கடலுார் அரசு மருத்துவக் கல்லுாரியில், பழைய மாணவர்களுக்கு ஏற்கனவே கட்டணம் குறைக்கப்பட்ட நிலையில், மேலும் குறைத்தால் அது தவறான முன் உதாரணமாகிவிடும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது, அவர் அளித்த பதில்: ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி, பல் மருத்துவக் கல்லுாரி, 2013 முதல் அரசு பல்கலையாக செயல்பட்டு வருகிறது. அங்கு மாணவர்கள் சேரும்போது, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 5.44 லட்சம் ரூபாய்; பல் மருத்துவ படிப்புக்கு 3.54 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த ஒப்புதல் அளித்தனர்.அரசாணைஅந்தக் கல்லுாரிகள் அரசு வசம் வந்த பின், அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 13 ஆயிரத்து 610 ரூபாய்; பல் மருத்துவ படிப்புக்கு, 11 ஆயிரத்து 610 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின், அரசு கல்லுாரியாக அறிவிக்கப்பட்ட பின் சேரும் மாணவர்களுக்கு மட்டும், கட்டண குறைப்பு பொருந்தும் என, மற்றொரு அரசாணை வெளியிடப்பட்டது.அதை எதிர்த்து, பழைய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவக் கல்லுாரியாக மாற்றப்பட்டதால், கட்டணத்தை குறைக்க கோரினர். எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், மாணவர்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.கட்டண உயர்வை எதிர்த்து, மாணவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர்.
மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என, அ.தி.மு.க., அரசு வாதிட்டது. அந்த மாணவர்களை பழைய கட்டணம் செலுத்த வைத்தது. இன்று கட்டணத்தை குறைக்கும்படி கூறுகின்றனர். காலம் கடந்தாவது மாணவர்கள் மீது, அ.தி.மு.க.,வினருக்கு அக்கறை வந்ததற்கு மகிழ்ச்சி.உதவித் தொகைஅந்த மாணவர்கள் முழு கட்டணத்தை தள்ளுபடி செய்ய, நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், எம்.பி.பி.எஸ்., கட்டணத்தை, நான்கு லட்சம் ரூபாயாகவும்; மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை, 2.50 லட்சம் ரூபாயாகவும் அரசு குறைத்தது. இதனால், தமிழக அரசுக்கு 119 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட, பயிற்சி மருத்துவர்களுக்கான உதவித் தொகையை மீண்டும் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், 16.84 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மீதமிருக்கும் காலத்திற்கு, அரசு கல்லுாரி கட்டணத்தை செலுத்த அனுமதிக்க கோரி, மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்கள், 13 ஆயிரத்து 610 ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளனர். ஏற்கனவே இருந்த மாணவர்களுக்கு, மொத்த கட்டணத்தை தள்ளுபடி செய்தால், 300 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
போராடக்கூடாது
மேலும், அது தவறான முடிவாகிவிடும். எனவே, அவர்களை உசுப்பி விடுவதை கைவிட வேண்டும். மாணவர்கள் படிக்கிற நேரத்தில் போராடக்கூடாது. இவ்வாறு சுப்பிரமணியன் தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எழுந்து, ''அண்ணாமலை பல்கலை மூடும் நிலையில் இருந்தது. அ.தி.மு.க., ஆட்சியில் தான், 2,000 கோடி ரூபாய் ஒதுக்கி, பல்கலை காப்பாற்றப்பட்டது,'' என்றார்.

No comments:
Post a Comment