பள்ளி மேலாண்மைக் குழு: பெற்றோர்களே இது உங்களுக்கான தருணம்!
கடந்த 2022 மார்ச் 20 அன்று அனைத்துப் பெற்றோர்களையும் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்.எம்.சி.) பற்றிப் பேச வைத்தது, பள்ளிக் கல்வித் துறை ஏற்படுத்திய மாபெரும் அதிர்வு. அடித்தளம் சரியாக இருந்தால் மட்டுமே, மேல் கட்டுமானம் சரியாக இருக்கும். அடித்தளமாக விளங்குவது எஸ்.எம்.சி. உறுப்பினர்கள். நமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் நமது எதிர்காலத்தையும் மனக்கண்முன் நிறுத்தி, அவர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது பெற்றோர்களாகிய நமது பொறுப்பு.
எதிர்வரும் எஸ்.எம்.சி. மறுகட்டமைப்பு நிகழ்வில் 20 பேர் கொண்ட குழுவில், ஆசிரியர்கள் 2 பேர், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள் 2 பேரைத் தவிர்த்து (இவர்கள் பதவி வழியில் உறுப்பினர்களாக ஆக்கப்படுவார்கள்), நமது ஊர் சார்ந்த, மிகச் சிறந்த கல்வியாளரை நாம் அடையாளம் கண்டு இணைக்க வேண்டும். மீதமுள்ள 15 பதவிகளுக்கு (எஸ்.எம்.சி. வழிகாட்டுதலின்படியான) ஆர்வமிக்க, அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட, விவரமான பெற்றோர்களைச் சாதி, மத, அதிகார மயக்கங்களுக்கு அப்பாற்பட்டு நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்

No comments:
Post a Comment