விழுப்புரம் அருகே அரசு பள்ளி மாணவர் விஷம் குடித்ததாக நாடகமாடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.விழுப்புரம் அடுத்த கோலியனுாரைச் சேர்ந்த 16 வயது மாணவர், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
இவர், நேற்று காலை 8:30 மணிக்கு பள்ளி சென்றார். வகுப்பு துவங்கும் முன், பள்ளி வளாகத்தில் அமர்ந்து, ஒரு பொட்டலத்தை பிரித்து எதையோ சாப்பிட்டுள்ளார்.இதைப் பார்த்த சக மாணவர்கள், 'என்ன சாப்பிடுகிறாய்?' எனக் கேட்டுள்ளனர். 'விஷம் சாப்பிட்டேன்' என்றபடி, பேப்பரை கசக்கி எறிந்துள்ளார்.அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களிடம் கூறினர். சக மாணவர்கள், அந்த மாணவரை பைக்கில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 'இனிமா' கொடுக்க ஏற்பாடு செய்தனர். அதற்குள் அந்த மாணவர், 'விஷம் ஏதும் சாப்பிடவில்லை' என, டாக்டரிடம் தெரிவித்தார்.
'பள்ளி வரும்போது, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கும் சத்துமாவை வாங்கி, பேப்பரில் மடித்து எடுத்து வந்து சாப்பிட்டேன். சக மாணவர்களுக்கு கொடுக்க விருப்பமின்றி விஷம் சாப்பிட்டதாக கூறினேன்' என்றார்.தகவலறிந்த விழுப்புரம் கலெக்டர் மோகன், மாணவரிடம் மொபைல் போனில் பேசி, அறிவுரை வழங்கினார்.

No comments:
Post a Comment