UGC நிதி முறைகேடு - அரசு கலைக் கல்லுாரி பேராசியர் 'சஸ்பெண்ட்' - Daily Dhuniya

Breaking

Sunday, April 24, 2022

UGC நிதி முறைகேடு - அரசு கலைக் கல்லுாரி பேராசியர் 'சஸ்பெண்ட்'

பல்கலை மானியக்குழு நிதி

பல்கலை மானியக்குழு நிதி முறைகேடு தொடர்பாக, கோவை அரசு கலைக் கல்லுாரி தாவரவியல் பேராசியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

கோவை அரசு கலைக் கல்லுாரியில் தாவரவியல் துறைக்கு 2012ல் ஆராய்ச்சி சிறப்பு பயிற்சி வகுப்பு பிரிவுக்கு 41 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இந்த நிதியை பயன்படுத்துவதற்கான கால அவகாசம், 2017ம் ஆண்டுடன் முடிந்தும், கல்லுாரி தரப்பில் இருந்து பயன்பாட்டு சான்றிதழ் யு.ஜி.சி.,க்கு சமர்ப்பிக்கப்படவில்லை. பேராசியர் 'சஸ்பெண்ட்'

இதையடுத்து, வட்டியுடன் 55 லட்சம் ரூபாய் செலுத்த யு.ஜி.சி., உத்தரவிட்டது.இந்த நிதியை யார் பெற்றார்; எதற்கு செலவழிக்கப்பட்டது என்ற எவ்வித தகவல்களும் இதுவரை நிர்வாக அதிகாரிகளுக்கு தெரியவில்லை என தெரிந்தது.மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் தலைமையில் நடந்த ஆய்வுகளில், இது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்நிதி முறைகேடு குறித்து, தாவரவியல் துறை பேராசிரியர் ரவி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

கல்லுாரியில், குறிப்பிட்ட துறையில் பி.ஜி., டிப்ளமா படிப்பு துவங்குவதற்காக, யு.ஜி.சி., நிதி வழங்கப்பட்டது. ஆனால், ேபராசிரியர் ரவி, நிதியை முறைகேடாக கல்லுாரியின் வேறு பல திட்டங்களுக்கு பயன்படுத்தியுள்ளார்.இதன் அடிப்படையில், பேராசிரியர் ரவியை கல்லுாரி கல்வி இயக்குனர் பூரணசந்திரன் நேற்று 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். யு.ஜி.சி., நிதியை வேறு ஒரு திட்டத்துக்கு பயன்படுத்தியதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment