தமிழகத்தில் இன்று முதல் April 2 சொத்து வரி உயர்வு - Daily Dhuniya

Breaking

Friday, April 1, 2022

தமிழகத்தில் இன்று முதல் April 2 சொத்து வரி உயர்வு

நேற்றைய தினம் முதல் தமிழகத்தில் பல்வேறு விதமான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது. அதுவும் குறிப்பாக தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சொத்து வரியும் உயர்த்தப்பட்டுள்ளதாக காணப்படுகிறது.

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் சொத்துவரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொத்துவரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் 15வது நிதி ஆணையம் கொடுத்த நிபந்தனைகளின் அடிப்படையில் இத்தகைய சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது .சென்னையில் பிரதான நகரப்பகுதியில் 600 சதுர அடிக்கும் குறைவாக உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் 600 முதல் 1200 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75% வரை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. சென்னையில் 1201 முதல் 1,800 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு சொத்துவரி 100 சதவீதம் உயர்ந்துள்ளதாக தமிழக அரசு கூறியது.

சென்னையில் 1801 சதுர அடிக்கு மேல் உள்ள பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கான சொத்து வரி 150 சதவீதம் உயர்ந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

No comments:

Post a Comment