அடுத்த கல்வியாண்டு ஜூன் 13-இல் தொடங்கும்: பள்ளிக் கல்வித் துறை - Daily Dhuniya

Breaking

Friday, April 1, 2022

அடுத்த கல்வியாண்டு ஜூன் 13-இல் தொடங்கும்: பள்ளிக் கல்வித் துறை

தமிழகத்தில் 2022-23 கல்வியாண்டு, ஜூன் 13-ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித் துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:2021-22 ஆம் கல்வியாண்டைப் பொருத்தவரை, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மே 2 ஆம் தேதியுடன் செய்முறைத் தேர்வு நிறைவடைகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 28-ஆம் தேதியும், பிளஸ் 1 மாணவர்க ளுக்கு மே 31-ஆம் தேதியும்,

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 30-ஆம் தேதியும் பொதுத் தேர்வு நிறைவடைகிறது.

இதேபோல, மே 13-ஆம் தேதியுடன் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஆண்டுத் தேர்வுகள் நிறைவடைகின்றன. ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையும், நடப்பு கல்வி யாண்டின் கடைசி வேலைநாளும் மே 13-ஆம் தேதியாகும்.

இதைத் தொடர்ந்து, பிளஸ் 1 தவிர பிற வகுப்புகளுக்கு ஜூன் 13-ஆம் தேதி முதல் 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கும். பிளஸ் 1 வகுப்பு ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும்.

No comments:

Post a Comment