சென்னை வளசரவாக்கத்தில் வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவன் தீக்ஷித் உயிரிழந்தது தொடர்பாக பள்ளி தாளாளருக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. 10 கேள்விகளுக்கு 2 நாட்களில் பதில் அளிக்கும்படி தனியார் பள்ளி தாளாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகல்வி அனுப்பிய நோட்டீஸை மையமாக வைத்து 10 கேள்விகளை காவல்துறை கேட்டுள்ளது. 2 நாட்களில் பள்ளி நிர்வாகம் எழுத்துப்பூர்வ விளக்கமாக அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது தொடர்பாக வேன் ஓட்டுநர் மற்றும் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி ஆகியோர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. ந்த பள்ளியில் தீக்ஷித் என்ற 7 வயது மாணவர் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 28-ம் தேதி வகுப்பறைக்கு சென்ற தீக்ஷித் வேனில் ஒரு பொருளை மறந்து வைத்து விட்டதால், அதை எடுக்க வேனுக்கு திரும்பியுள்ளார். அப்போது வேனின் டிரைவர் வேனை பின்நோக்கி எடுத்துள்ளார்.
இந்நிலையில் வேனின் பின்புறம் நின்ற மாணவன் மீது வேன் மோதி திஷித் பள்ளி வளாகத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்பு மாணவனின் உடல் பெற்றோரிடம் வழங்கப்பட்டு இறுதி மாரியதை செய்யப்பட்டு அவரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து வாகன ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்ய ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பள்ளி வாகனம் மோதியதில் 2ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை அளிக்க மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.
Friday, April 1, 2022
Home
Police notice to school governor
Private School's
பள்ளி தாளாளருக்கு காவல்துறை நோட்டீஸ்; 2 நாட்களில் பதில் தர உத்தரவு
பள்ளி தாளாளருக்கு காவல்துறை நோட்டீஸ்; 2 நாட்களில் பதில் தர உத்தரவு
Tags
# Police notice to school governor
# Private School's
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Private School's
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment