மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கக செய்திக் குறிப்பு - Daily Dhuniya

Breaking

Wednesday, April 20, 2022

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கக செய்திக் குறிப்பு

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்,

சென்னை-06.

18.04.2022

செய்திக் குறிப்பு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப்பிரிவு 12(1)(சி)இன்படி 2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கு 25% இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் (எல்.கே. ஜி. அல்லது முதல் வகுப்பு) அதாவது பள்ளி எந்த வகுப்பில் ஆரம்பிக்கிறதோ அந்த வகுப்பில் சேர்க்கைக்கு 20.04.2022 முதல் 18.05.2022 வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 18.05.2022 வரை பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்மந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையிலும் 21.05.2022 அன்று மாலை 5.00 மணிக்கு வெளியிடப்படும்.

மேற்காண் திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2018 முதல் 31.072019 க்குள்ளும், ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2016 முதல் 31.07.2017 க்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ்களை உரிய அலுவலரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.

1 பிறப்புச் சான்றிதழ்

2. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ்

3. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ்

4. நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 இலட்சத்திற்கும் கீழ் உள்ள வருமானச் சான்றிதழ்

5. இருப்பிடச் சான்று

பெற்றோர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும், முதன்மைக் கல்வி அலுவலர்/ மாவட்டக் கல்வி அலுவலர்/ வட்டாரக் கல்வி அலுவலர்/ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள் மைய அலுவலங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்கத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment