உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் - ஆட்சியர் தகவல் - Daily Dhuniya

Breaking

Wednesday, April 20, 2022

உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் - ஆட்சியர் தகவல்

உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் திருவள்ளூர் ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் வக்பு நிறுவனங்ளில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 106 வக்பு நிறுவனங்ளில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். இருசக்கர வாகனம் வாங்க மானியம்

விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வக்பு நிறுவனங்களில் பணிபுரி யும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 106 வக்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள், மாவட்ட

ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment