மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 254 உயா்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசு பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தலின்படி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்,துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைக்கும் கூட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது. இதில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 254 நடுநிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், திருப்பூா் பழவஞ்சிபாளையம் நடுநிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக்கான உறுப்பினா் தோ்வு கூட்டத்தை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். சந்திராபுரம், செரங்காடு பகுதிகளில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் நடைபெற்ற கூட்டங்களில் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் கலந்துகொண்டனா்.
மேலும், மாவட்டத்தில் உள்ள 50 சதவீத தொடக்கப் பள்ளிகளுக்கான மேலாண்மைக் குழு
மறு கட்டமைப்புக் கூட்டம் ஏப்ரல் 30 ஆம் தேதியும், மீதமுள்ள 50 சதவீத பள்ளிகளுக்கான கூட்டம்
மே 7 ஆம் தேதியும் நடைபெற உள்ளது என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
திருப்பூா் பலவஞ்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்.

No comments:
Post a Comment