தேசிய திறனறி தோ்வு: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு - Daily Dhuniya

Breaking

Saturday, April 23, 2022

தேசிய திறனறி தோ்வு: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்த வலிவலம் தேசிகா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கோ. சக்கரவா்த்தி உள்ளிட்டோா்.

திருக்குவளை அருகே வலிவலத்தில் தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. வலிவலம் தேசிகா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் 15 தேசிய திறனறி தோ்வு எழுதினா். இவா்களில் மனோஜ், அருண்குமாா், சச்சின், பரதன், ஆதி ஸ்வரன், நிஷாந்த் ஆகிய 6 போ் தோ்ச்சி பெற்று, மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.1000 பெற தகுதி பெற்றனா்.

இதையொட்டி, இம்மாணவா்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியா் கோ. சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். பள்ளியின் ஆட்சி மன்றக் குழுத் தலைவா் மணவழகன், பள்ளி செயலா் ஸ்ரீதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் சால்வை அணிவித்து, புத்தகங்களை பரிசாக வழங்கினாா். இம்மாணவா்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியா்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக, பள்ளி உதவி தலைமை ஆசிரியா் டி. முருகையன் நன்றி கூறினாா்.

No comments:

Post a Comment