‘வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்’
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், தொடா்ந்து பதிவினை புதுப்பித்தும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினா் 45 வயதுக்கு மிகாமலும், பிசி, பிசிஎம், எம்பிசி, ஓபிசி பிரிவினா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவுபெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாதவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்சவரம்பு, வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவியா், பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்பு பயின்றவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவா்கள் வேலைவாய்ப்பு அடையாளஅட்டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆன்லைன் பிரின்ட்அவுட் போன்றவற்றுடன் அலுவலக வேலை நாள்களில் திருநெல்வேலி மாவட்டவேலைவாய்ப்பகத்திற்கு நேரில் வந்து அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். அல்லது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூா்த்தி செய்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வருவாய்த் துறை சான்றில் கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாளஅட்டை (பழையது), அசல் கல்விச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகம் நாளது தேதி வரை குறிப்புகளிடப்பட்டது, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றுடன், அலுவலக வேலை நாள்களில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வர வேண்டும்.

No comments:
Post a Comment