பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி!!
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், தலைவா்களின் பிறந்தநாள் விழாக்களையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. தருமபுரி மாவட்டத்தில் அம்பேத்கா் பிறந்தநாள் பேச்சுப் போட்டி அரசு கலைக் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கு வருகிற ஏப்.19 முற்பகல் 10 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும் நடைபெறவுள்ளது. கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக ரூ. 2,000 வீதம் வழங்கப்பட உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

No comments:
Post a Comment