பள்ளி வாகனம் மோதி சிறுவன் பலி - Daily Dhuniya

Breaking

Monday, March 28, 2022

பள்ளி வாகனம் மோதி சிறுவன் பலி

சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர். இவரும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திக்‌ஷித்(7) என்ற மகன் இருந்தான். திக்‌ஷித் ஆழ்வார்திருநகரில் உள்ள பிரபல வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். வகுப்பில் முதல் மாணவனாக படித்து வந்த திக்‌ஷித் வழக்கம் போல் இன்று காலை 8.40 மணிக்கு வீட்டில் இருந்து பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றான். பள்ளி வேனை பூங்காவனம் என்பவர் ஓட்டி வந்தார். வேன் பள்ளி வளாகத்திற்குள் வந்ததும். வேனில் இருந்து திக்‌ஷித் உள்ளிட்ட மாணவர்கள் இறங்கி வகுப்பு அறைக்கு சென்றனர். அப்போது மாணவன் திக்‌ஷித் வகுப்பு அறைக்கு செல்ல வேனுக்கு பின்னால் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது டிரைவர் பள்ளி மாணவர்கள் அனைவரும் இறங்கி சென்று விட்டதால் வேனை, பின் நோக்கி இயக்கி வெளியே வாகனத்தை எடுத்து செல்ல முயன்றார். இதில் பின்னால் வகுப்பு அறைக்கு நடந்து சென்ற மாணவன் மீது எதிர்பாரா

த வகையில் வேன் மோதியது. இதில் நிலை தடுமாறி மாணவன் கீழே விழுந்தான்.

இதை பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் கவனிக்க வில்லை. வேனை பின் நோக்கி இயக்கிய டிரைவர் பூங்காவனமும் கவனிக்கவில்லை. இதனால் மாணவனின் தலைமீது வேனின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் மாணவன் உயிரிழந்தான். மாணவன் வேனில் சிக்கியதை கூட கவனிக்காமல் டிரைவர் தொடர்ந்து வேனை இயக்கியுள்ளார். அப்போது சக மாணவர்கள் அலறும் சத்தம் கேட்ட பிறகு தான் வேன் டிரைவர் வாகனத்தை நிறுத்தி உள்ளார். இதனால் சிறிது நேரம் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விபத்து குறித்து பள்ளி நிர்வாகம் வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த 1 மணி நேரத்திற்கு பிறகு தான் மாணவன் இறந்தது குறித்து அவனது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் விபத்து நடந்த பள்ளி வளாகத்திற்கு சென்று அழுது புரண்டு துடித்தனர். இது அங்கு இருந்தவர்களின் மனதை கரைய செய்தது.

பள்ளி வளாகத்திற்குள் விபத்து நடந்ததால் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் பூங்காவனத்தை கைது செய்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், விபத்து தொடர்பாக பள்ளி தாளாளர், வேன் ஓட்டுநர், முதல்வர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களை வேனில் இருந்து இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment