ஆசிரியரை விடுவிக்கக்கோரி பள்ளி முன் மாணவிகள் மறியல் - Daily Dhuniya

Breaking

Tuesday, February 22, 2022

ஆசிரியரை விடுவிக்கக்கோரி பள்ளி முன் மாணவிகள் மறியல்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் , 52 வயது வரலாறு ஆசிரியர் ராஜ்குமார் பணியாற்றி வந்தார் . பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 17ம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு மற்ற மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதையும் படிக்க | DEE - திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை ( 22.02.2022 )

ஆசிரியர் மீது வேண்டுமென்றே பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பள்ளி முன் மறியல் செய்தனர். பள்ளிக்கல்வி அதிகாரிகள் மற்றும் போலீசார் மாணவியரிடம் பேச்சு நடத்தினர். உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் தெரிவித்ததால், மாணவியர் கலைந்தனர். மறியலால், மதுக்கூர் - மன்னார்குடி சாலையில், 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment