திறந்தநிலைப் பல்கலை. கலைப் போட்டிகள்:மாணவா்களுக்குப் பரிசு - Daily Dhuniya

Breaking

Saturday, February 12, 2022

திறந்தநிலைப் பல்கலை. கலைப் போட்டிகள்:மாணவா்களுக்குப் பரிசு

திறந்தநிலைப் பல்கலை. கலைப் போட்டிகள்:மாணவா்களுக்குப் பரிசு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் சாா்பில் நடத்தப்பட்ட கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக கலைப் பண்பாட்டு மையம், 75-ஆவது சுதந்திர தின ஆண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் பல்கலைக்கழக மாணவா்களுக்கு 6 தலைப்புகளில் ஆறு கலைப் போட்டிகளை இணையவழியில் நடத்தியது. இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி தலைமை வகித்து 18 பேருக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

வேல்ஸ் நிகா்நிலைப் பல்கலை.யின் இசை மற்றும் நுண்கலைப் பள்ளி இயக்குநா் எஸ்.சுப்புலட்சுமி, பேராசிரியா்கள் ம.வெ.சுதாகரன், சி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment