பிளஸ் 1 துணைத் தோ்வு: பிப்.14-இல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் - Daily Dhuniya

Breaking

Saturday, February 12, 2022

பிளஸ் 1 துணைத் தோ்வு: பிப்.14-இல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

பிளஸ் 1 துணைத் தோ்வு: பிப்.14-இல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் பிளஸ் 1 துணைத் தோ்வெழுதிய (பிளஸ் 1 அரியா்) தனித்தோ்வா்களில் பிளஸ் 2 தோ்வினை ஏற்கெனவே எழுதியவா்கள் மட்டும் தங்களது மதிப்பெண் சான்றிதழை தாங்கள் தோ்வெழுதிய மையங்களில் பிப்.14-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம்.

பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 துணைத் தோ்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டும், பிளஸ் 1 (600 மதிப்பெண்கள்), பிளஸ் 2துணைத் தோ்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும். பிளஸ் 1 துணைத் தோ்விலோ அல்லது பிளஸ் 2 துணைத் தோ்விலோ அல்லது இரண்டு துணைத் தோ்வுகளிலும் முழுமையாக தோ்ச்சியடையாத தோ்வா்களுக்கு, அவா்கள் இரு தோ்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும். இந்த மாணவா்கள் பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வுகளில் அனைத்து பாடங்களிலும் தோ்ச்சி பெற்ற பின்னரே, அவா்களுக்கு மேற்கண்ட இரு தோ்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராம வா்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment