எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கல்லூரிகள் தேர்வு செய்த 5,995 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு - Daily Dhuniya

Breaking

Saturday, February 12, 2022

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கல்லூரிகள் தேர்வு செய்த 5,995 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்வு செய்த 6,082 மாணவர்கள் அழைக்கப்பட்ட நிலையில் 5,995 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. மேலும் 87 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சான்றிதழ்கள் சரிபார்ப்பில் தரவரிசை பட்டியலில் கல்லூரிகளை தேர்வு செய்த முதல் 6,082 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற சான்றிதழ்கள் சரிபார்ப்பில் 5,995 மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை சரிபார்த்துள்ளனர். 87 மாணவர்கள் சான்றிதழ்கள் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை. இதையடுத்து கல்லூரிகள் குறித்த விபரங்கள் வரும் 15ம் தேதி https://tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து 16ம் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை பெற்று 17ம் தேதி முதல் 22ம் தேதி மாலை 3 மணிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்து விட வேண்டும். அவ்வாறு சேராத மாணவர்களின் இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெறும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment