கர்நாடகாவில் 9,10ம் வகுப்புகள் பிப்.14 முதல் திறப்பு! - Daily Dhuniya

Breaking

Friday, February 11, 2022

கர்நாடகாவில் 9,10ம் வகுப்புகள் பிப்.14 முதல் திறப்பு!

கர்நாடகாவில் வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். ஹிஜாப் விவகாரத்தில் மாணவர்களிடையே வெடித்த வன்முறையை தணிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க | பல்கலைக்கழகங்களுக்கு AICTEன் அதிரடி உத்தரவு

திங்கட்கிழமை முதல் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. கல்லூரி திறப்பு குறித்து விரைவில் நாளைக்குள் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக பெங்களூரு ஊரக மாவட்டம் தொட்டபல்லாபுர் நகரில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். ரோந்து வாகனம், துப்பாக்கி ஏந்திய போலீசார், பெண் போலீசார் என உயர் காவல்துறையினர் முன்னிலையில் நகரம் முழுவதும் ஊர்வலமாக வந்தனர்.

இதையும் படிக்க | எம்பிபிஎஸ், பிடிஎஸ் - 15ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் இணையதளத்தில் வெளியீடு

பொதுமக்கள் இடையே அச்ச உணர்வை போக்கவே கொடி அணிவகுப்பு பேரணி நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment