நாடு முழுவதும் திட்டமிட்டபடி யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான பிரதான தேர்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெறும் என ஏற்கனவே மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவித்து இருந்தது.
இந்த சூழலில் நாடு முழுவதும் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பல மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதனால் சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வுகள் நடைபெறுமா? என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் காணப்பட்டன. இதற்கு விடையளிக்கும் வகையில் நேற்று முன் தினம் யு.பி.எஸ்.சி. நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்தவகையில் சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று முதல் நடைபெறும் என அறிவித்தது.
அதன்படி, நாடு முழுவதும் திட்டமிட்டபடி யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் தேர்வுகள் நடைபெற்று வருகின்றனர். தேர்வர்கள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் தேர்வு எழுதி வருகின்றனர். தமிழகத்தில் 2 மையங்களில் நடைபெறும் யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் 332 பேர் பங்கேற்றுள்ளனர். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான தேர்வுகள் 7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தமிழகத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுத செல்பவர்களுக்கு கொரோனா கட்டுப்பாட்டில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment