கற்றல் வலுவூட்டல் பயிற்சி - சமூக இடைவெளி இல்லை என ஆசிரியர்கள் புகார் - Daily Dhuniya

Breaking

Tuesday, January 11, 2022

கற்றல் வலுவூட்டல் பயிற்சி - சமூக இடைவெளி இல்லை என ஆசிரியர்கள் புகார்

முதல் 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான கற்றல் விளை வுகள் என்ற சிறப்பு வலுவூட்டல் பயிற்சி முகாம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது.

நெல்லை மாவட்டத்தில் 11 கல்வி ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இந்த பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. ஒவ்வொருபள் ளியிலும் 115 முதல் அதிகபட்சமாக 279 பேர்வரை இரண்டு குழுவாக பயிற்சி அளிக்கப்படுகிறது. நெல்லை டவுன் பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மேலப்பாளை யம் காயிதே மில்லத் அரசு மேல்நி லைப்பள்ளி, மணிமுத்தாறு அரசு உயர்நிலைப்பள்ளி, மானூர் அரசு உயர்நிலைப்பள்ளி, தளபதி சமுத்தி ரம் அரசு மேல்நிலைப்பள்ளி, தருவை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 11 இடங்களில் இந்த பயிற்சி முகாம் பிப்.2 வரை (16 அரசு வேலை நாட்க ளில்) நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூறுகையில், கொரோனா தொற்று 3வது அலை பரவும் நிலையில் ஒரே அறையில் அதிக ஆசிரியர்களை சமூக இடை வெளியின்றி அமரவைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

சேரன்மகாதேவி அரசு பெண்கள் மேல்நிலைப்பள் ளியில் நடைபெறும் வலுவூட்டல் பயிற்சி முகாமில் ஒரு இருக்கையில் 5 ஆசிரியர்கள் அமரவைக்கப்பட் டுள்ளனர். எனவே உரிய பாதுகாப் பான முறையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

No comments:

Post a Comment