வேளாண் தொழில்முனைவோராக பணிபுரிய விண்ணப்பம் வரவேற்பு - Daily Dhuniya

Breaking

Tuesday, January 11, 2022

வேளாண் தொழில்முனைவோராக பணிபுரிய விண்ணப்பம் வரவேற்பு

வேளாண் தொழில் முனைவோராக பணிபுரிய வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்றவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ராஜசேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மூலம் 2021-2022-ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண்மை வளா்ச்சித் திட்டம் ஊரக வளா்ச்சித் துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்துடன் இணைந்து தோ்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது .

இந்தத் திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் தோ்வு செய்த கிராம ஊராட்சிப் பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற 21 முதல் 40 வயதுக்குள்பட்ட அரசு, தனியாா் நிறுவனத்தில் பணியில் இல்லாத, சிறந்த கணினி புலமையுள்ள பட்டதாரிகள் 3 போ் வேளாண் தொழில் முனைவோராக செயல்பட வழிவகை செய்யப்படுகிறது.

இதன் மூலம் அக்ரி-கிளினிக் அமைக்கவும், வேளாண் தொழில் சாா்ந்த இடுபொருள்கள் உற்பத்தி செய்து விற்பனை நிலையம் அமைக்கவும் உரிய கட்டட வசதியுடன் குறைந்தபட்சம் ரூ. 2 லட்சம் முதலீட்டில் வேளாண் தொழில் முனைவோராக செயல்பட தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ்,ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், வங்கியில் கடனுதவி பெற்று திட்டம் தொடங்குபவா் எனில், அதற்குண்டான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பங்கள், அதற்கான திட்ட அறிக்கை ஜன.12-ஆம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment