தேசிய திறனாய்வுத் தேர்வு பிப்ரவரி 2022 (NTSE) (மாநில அளவிலானது) செய்திக் குறிப்பு - Daily Dhuniya

Breaking

Wednesday, January 19, 2022

தேசிய திறனாய்வுத் தேர்வு பிப்ரவரி 2022 (NTSE) (மாநில அளவிலானது) செய்திக் குறிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006

தேசிய திறனாய்வுத் தேர்வு பிப்ரவரி 2022 (NTSE) (மாநில அளவிலானது)

செய்திக் குறிப்பு

29.01.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெற இருந்த தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE), கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 05.02.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. மேலும், தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 19.01.2022 அன்று பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், தேர்வு தேதி மாற்றத்தின் காரணமாக 25.01.2022 அன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் / தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐப் பயன்படுத்தி இத்தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

பொதுவான அறிவுரைகள்:

தேர்வர்கள் (NTSE) தேசிய திறனாய்வுத் தேர்விற்க்கான நுழைவுச்சீட்டுகளைப் பெற தங்கள் பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முககவசம் (Mask)அணிந்து வரவேண்டும்.

தேர்வர்கள் போதிய சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment