பள்ளி தலைமை ஆசிரியையை மாற்றக்கோரி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணித்து தர்ணா - Daily Dhuniya

Breaking

Monday, August 22, 2022

பள்ளி தலைமை ஆசிரியையை மாற்றக்கோரி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணித்து தர்ணா

குடியாத்தம் அருகே மக ளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையை மாற்றக்கோரி ஆசிரியர் கள், அலுவலர்கள் இன்று வகுப்பை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ள னர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டையில் அரசு மக ளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு குடியாத் தம் நகரம் மற்றும் பெரும் பாடி, அக்ராகரம், ஏரிப் பட்டறை, ஜிட்டப்பல்லி, சேம்பல்லி, கன்னிகாபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிக ளில் இருந்து 300க்கும் மேற் பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசி ரியைகள். அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசி ரியையாக பர்மிலா ஈவா ஏஞ்சலின் என்பவர் உள் ளார்.

தலைமை ஆசிரியை பர்மிலா ஈவாஏஞ்சலின், தங்களை ஒருமையில் பேசி யும், அவதூறாக பேசிதுன் புறுத்துவதாக மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து கேட்க பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற் றோரையும் தலைமை ஆசி ரியை அவதூறு பேசியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர். குடியாத்தம் டவுன் போலீ சில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் இருதரப்பையும் அழைத்து சமாதானம் செய்தனர்.

இதே பள்ளியில் பணி யாற்றும் குடியாத்தம் அடுத்த காமாட்சியம் மன் கார்டனை சேர்ந்த தையல் பயிற்சி ஆசிரியை ஜோதியையும் தலைமை ஆசிரியை பர்மிலா ஈவா ஏஞ்சலின் கடந்த சில நாட் களுக்கு முன் ஒருமையில் பேசி மிரட்டினாராம். இதனால் மன உளைச்ச லில் இருந்த ஆசிரியை 2 நாட்களுக்கு முன் தூக்குப் போட்டு தற்கொலை செய் துகொண்டுள்ளார். இது தொடர்பாக தலைமை ஆசிரியை மீது குடும்பத்தி னர்போலீசில் புகார் செய் தனர். அப்போது அஞ்சலி செலுத்த வந்த எம்எல்ஏ அமலுவிஜயனிடம் ஆசி ரியர்கள் முறையிட்டனர்.

இந்நிலையில் தலைமை ஆசிரியை பர்மிலா ஈவா ஏஞ்சலினை மாற்றக் கோரி, தொடர்ந்து இன்று பள்ளியில் 30க்கும் மேற் பட்ட ஆசிரியர், ஆசிரி யைகள், பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்பை புறக்கணித்த னர். மேலும் நுழைவாயி லில் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தலைமை ஆசிரியையை மாற்றவேண்டும், இல்லா விட்டால் எங்கள் அனை வரையும் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆசிரியர்களு டன் மாணவிகள் சில ரும் தர்ணாவில் ஈடுபட் டுள்ளனர்.

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளதால் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு. ஆசிரியர் பயிற்சி மாண வர்கள் பாடம் எடுத்தனர். தலைமை ஆசிரியையை மாற்றக்கோரி ஆசிரியர் கள் வகுப்பை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

No comments:

Post a Comment