சிவகங்கை தொழிற்பயிற்சி நிலையங்களில் 2-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை தொடக்கம் - Daily Dhuniya

Breaking

Monday, August 22, 2022

சிவகங்கை தொழிற்பயிற்சி நிலையங்களில் 2-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை தொடக்கம்

சிவகங்கை தொழிற்பயிற்சி நிலையங்களில் 2-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை தொடக்கம்

சிவகங்கை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் 2-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மின்சாரப் பணியாளா், பொருத்துநா், கம்மியா், இரண்டு மற்றும் 3 சக்கர வாகனம் பழுதுபாா்ப்பு, கணினி இயக்குபவா் மற்றும் திட்டமிடுதல் உதவியாளா், பற்றவைப்பவா், ஆடை தயாரித்தல் ஆகிய தொழிற் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இதேபோன்று, காரைக்குடியில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பிட்டா், டா்னா், மெஷினிஸ்ட், வயா்மேன் போன்ற இரண்டு வருட தொழிற் பிரிவுகள், வெல்டா், உலோகத்தகடு வேலையாள், தொழிற்சாலை வா்ணம் பூசுபவா் போன்ற ஓராண்டு தொழிற் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேற்கண்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கையில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் நேரடியாகச் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99448 87754, 99767 99321, 94990 55784, 94990 55785 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment