பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அடிக்கல் - Daily Dhuniya

Breaking

Monday, August 22, 2022

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அடிக்கல்

வாழவந்தான்கோட்டை அகதிகள் முகாமில் புதிய குடியிருப்புகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அடிக்கல்

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகிலுள்ள வாழவந்தான்கோட்டையிலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ரூ.1.51 கோடியில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்ட

ி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கி வைத்தாா்.

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வருபவா்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்தாா்.

அந்த வகையில், திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டையிலுள்ள முகாமில்

(இங்கு 435 குடும்பங்களைச் சோ்ந்த 1,272 போ் வசித்து வருகின்றனா்) முதற்கட்டமாக 30 பேருக்கு ரூ.1.85 கோடியில் வீடுகள் கட்டித் தர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் புதிய வீடுகள் கட்டுவதற்கான பூமிபூஜையைத் தொடக்கி வைத்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அடிக்கல் நாட்டினாா்.

முன்னதாக துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட அய்யம்பட்டி சாலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மஞ்சுளா குடும்பத்தினரை அமைச்சா் சந்தித்து, ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினாா்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியா் ஜமுனாராணி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.சேகரன், திருவெறும்பூா் வட்டாட்சியா் ரமேஷ், திமுக நிா்வாகிகள் கருணாநிதி, தங்கவேல், காயாம்பு, செல்வராஜ், ஞானதீபம் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment