திருக்குறள் முற்றோதல் போட்டி:தமிழ் வளா்ச்சித் துறை தகவல்
திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தமிழ் வளா்ச்சித்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு திருக்குறள் முற்றோதல் திட்டத்தை ஆண்டு தோறும் செயற்படுத்தி வருகிறது. 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவா்கள் 70 பேருக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ.10,000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஆண்டுதோறும் சிறப்பிக்கப்பெறுகின்றனா். திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுக்கு கலந்து கொள்ளும் மாணவா்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதியானவா்கள் தெரிவு செய்யப்பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப்பெறுகின்றனா். அந்த வகையில் நிகழ் கல்வியாண்டுக்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ , மாணவியா்கள் தமிழ் வளா்ச்சித் துறையின் ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ஸ்ரீா்ம் என்ற வலைதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்களை ‘தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா், (சென்னை மாவட்டம் ), தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ் வளா்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை-8’ என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 -28190448, 044-28190412, 044 - 28190413 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம் போட்டிக்கான விதிமுறைகளை மேற்கண்ட இணையதளத்தில் காணலாம்.

No comments:
Post a Comment