வேலை வாய்ப்பு - ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு - கடைசி நாள் 16.02.2022 - Daily Dhuniya

Breaking

Friday, January 14, 2022

வேலை வாய்ப்பு - ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு - கடைசி நாள் 16.02.2022

தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணிகை திருத்தணிகை வட்டம், திருவள்ளூர் மாவட்டம் - 631 209.

ந.க.எண்.2415/2021/அ1/நாள் : 12.01.2022

வேலை வாய்ப்பு கோரும் விளம்பர அறிவிப்பு

தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிபள்ளிக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்தல்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகை வட்டம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதியதாக ஏற்படுத்தப்படவுள்ள தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் நாதஸ்வர ஆசிரியர் மற்றும் தவில் ஆசிரியராக பணியாற்ற மாதம் 1-க்கு ஒப்பந்த ஊதியம் ரூ.35,000/-ம் என்ற அடிப்படையில் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 16.02.2022 - மாலை 5.45-மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி - தமிழில் எழுதவும் படிக்கவும், இசைக் கருவிகளை வாசிப்பதில் சான்றிதழ், யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது யாதொரு அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் நடத்தப்படும் நாதஸ்வரம்/தவில் பள்ளிகளில் மூன்றாண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

"வாத்யவிசாரதா” சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது இந்த விளம்பர அறிவிப்பு அன்று (12.01.2022) 35 வயது பூர்த்தி அடையாதவராக இருத்தல் வேண்டும். இதர விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் திருக்கோயிலின் இணையதளத்தில் https://hrce.tn.gov.in என்ற முகவரியில் கல்வித்தகுதி, வயது, மாதிரி விண்ணப்பபடிவம் மற்றும் இதர நிபந்தனைகளை பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment