கண்ணகி நகர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 24 ஆயிரத்து, 703 வீடுகள் உள்ளன. இங்கு, வசிப்போரின் பிள்ளைகள், அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் வழியாக, கல்வி கற்று வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக, முதல் தலைமுறை பட்டதாரிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.அவர்களுக்கு மேல் படிப்பு, வேலை வாய்ப்பு தொடர்பாக, முறையான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. இதை, அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் வழங்கி வருகிறது.நடப்பு கல்வியாண்டில், தாய் மற்றும் தந்தையை இழந்தோர், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியோர் என, 24 முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் படிக்கின்றனர். இவர்கள், மூன்று மற்றும் நான்கு ஆண்டுக்கான, முழு படிப்பு செலவையும், சி.ஐ.டி., 86 அறக்கட்டளை' ஏற்றுள்ளது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிர்வாகிகள் படிப்புக்கான உறுதி அளித்தனர். அதேபோல், பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியில், முதல் தலைமுறை பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் ஜெய்கணேஷ், படிப்பின் அவசியம், போட்டி தேர்வுகளில் பங்கேற்பது, வேலை தேர்வு, முன்னேற்றம் குறித்து, ஆலோசனை வழங்கினார்.
Thursday, December 23, 2021
முதல் தலைமுறை பட்டதாரிகள் ஊக்குவிப்பு
Tags
# முதல் தலைமுறை பட்டதாரி சான்ற
முதல் பட்டதாரி அரசாணை
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
முதல் தலைமுறை பட்டதாரி சான்ற
முதல் பட்டதாரி அரசாணை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment