மாதம் ரூ.3000/- ஊக்கத் தொகை - நாதஸ்வரம் மற்றும் தவில் இசைப்பயிற்சி பள்ளி மாணவர்கள் சேர்க்கை - 25.01.2022 கடைசி நாள் - Daily Dhuniya

Breaking

Friday, December 24, 2021

மாதம் ரூ.3000/- ஊக்கத் தொகை - நாதஸ்வரம் மற்றும் தவில் இசைப்பயிற்சி பள்ளி மாணவர்கள் சேர்க்கை - 25.01.2022 கடைசி நாள்

நாதஸ்வரம் மற்றும் தவில் இசைப்பயிற்சி பள்ளி மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு

இத்திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் நாதஸ்வரம் மற்றும் தவில் பயிற்சி பள்ளியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான சேர்க்கைக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்களிடமிருந்து மட்டும் கீழ்க்கண்ட தகுதியுடையவர்களிடமிருந்து எதிர்வரும் 25.12.2021 முதல் 25.01.2022 முடிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட வசதிகளுடன், கட்டணமில்லாமல் பயிற்சி வழங்கப்படும். மேலும் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3000/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

தகுதிகள்

1. நாதஸ்வரம்/தவில் பயிற்சி பள்ளி

நாதஸ்வரம் மற்றும் தவில் பயிற்சி பள்ளியில் சேர வயது வரம்பு 10 முதல் 15 வயதுக்குள்ளும். இசையில் ஆர்வமும், நாட்டமும் உடையவர் மட்டுமே சேர்க்கப்படுவர். கல்வித்தகுதி 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

மேற்கண்டவாறு தகுதிக்குட்பட்ட அனைத்து இனங்களுக்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25.01.2022 மாலை 05.45 மணி வரை பெறப்படும். அதன் பின்னர் வரக்கூடிய எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

சேர்க்கை படிவங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றும், இந்துசமய அறநிலையத்துறையின் கீழ்காணும் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொண்டும் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.



இணையதள முகவரி :https://hrce.tn.gov.in

சி.இலட்சுமணன், எம்.எஸ்சி., எம்.எல். எம்.பி.ஏ.,

No comments:

Post a Comment