பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளை கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆசிரியர் சங்க மாநில தலைவர் வலியுறுத்தல் - Daily Dhuniya

Breaking

Tuesday, November 23, 2021

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளை கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆசிரியர் சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்

பாலி யல் குற்றங்களை தடுக்க தனியார் பள்ளிகளை கண்காணிக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் கூறி யுள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள தாவது:

பெற்றோர்கள் குழந் தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது படிப்பதற்கும் நல்லப் பழக்க வழக்கங்க ளைக் கற்றுக் கொள்வதில் மட்டும் திருப்தியடைந்து விடவில்லை. மாறாக குழந்தைகள் பாதுகாப் பாக திரும்பி வருவார்கள் என்று நம்புவது ஆசிரியர் கள் மீது வைத்துள்ள நம் பிக்கையால் மட்டும் தான். அதனை கெடுக்கும் வகை யில் ஒரு சிலரின் தவறான செய்கையால் ஆசிரியர் சமுதாயமே தலைகுனிய வேண்டியுள்ளது. பாலியல் தொடர்பான செயலில் ஈடுபடுவோர் எந்த பள்ளியைச்சார்ந்தவ ராக இருந்தாலும் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட் டவுடன் பணி நீக்கம் செய் வதோடு அவரின் கல்விச் சான்றிதழ்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுப்பதுதான் பெண்களுக் கும், பெற்றோர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

தனியார் பள்ளி நிர்வா கம்பள்ளியின் பெயர்கெட் டுவிடும் என்று நினைக் கிறார்களே தவிர மாண வர்களின் நலனை கருத்தில் கொள்வதில்லை.

இதனால் வேலியே பயிரை மேயும் இழிவு செயல் அரங்கேறு கிறது. அரசுப்பள்ளிகளை கண்காணிப்பது போல தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளும் மாண வர்களின் நலனும் தொடர் கண்காணிப்பு அவசியம்.

அரசு கல்வித்துறை முதன்மைக்கல்வி அலுவ லர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்களும் தனியார் பள்ளிகளை கண்காணிக் கும் வகையில் அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு ஆசிரி யர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன்தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment