மாணவர்களிடம் பணம் வசூல்: அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் - Daily Dhuniya

Breaking

Tuesday, November 23, 2021

மாணவர்களிடம் பணம் வசூல்: அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

மாணவர்களிடம் பணம் வசூலித்த ஓசூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியையை பணி யிடை நீக்கம் (சஸ் பெண்டு) செய்து முதன்மை கல்வி அலுவ லர் மகேஸ்வரி நடவ டிக்கை எடுத்துள்ளார்.

பணம் வசூல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் உள்ள சூடா புரம் அரசு உயர்நிலைப்பள் ளியில் தலைமை ஆசிரியை யாக பணியாற்றி வருபவர் வெள்ளத்தங்கம்.

இவர் பள்ளி மாணவர்களிடம் 200 ரூபாய் வீதம் பணம் வசூலித்துள் ளார். இதுகுறித்து பெற்றோர் களின் புகாரின் பேரில், ஓசூர் கல்வி அலுவலர் முருகன் நேரில் சென்று பள்ளியில் விசாரணை நடத்தினார். அப்போதுகாரணம்இன்றி மாணவர்கள் பலரிடம் தலைமை ஆசிரியை பணம் வசூலித்தது தெரிய வந்தது. மேலும் பள்ளியில் உள்ள கழிப்பறை பராமரிப்பின்றி சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டது. அதேபோல பள்ளியில் மின் வயர்கள் ஆபத்தான நிலையில் இருந்தது.

பணியிடை நீக்கம்

இது குறித்து அவர், மாவட்ட கல்வி அலுவலர் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு அறிக்கைசமர் பித்தார். அதன்பேரில் பள் ளியை முறையாக பராமரிக் காத்து, மாணவர்களிடம் பணம் வசூலித்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பள்ளி தலைமை ஆசி ரியை வெள்ளத்தங்கத்தை பணியிடை நீக்கம் (சஸ் பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment