சி.எஸ்., முடித்தவர்களை, பிஎச்.டி., படிக்க அனுமதிக்கலாம் என்று சட்ட பல்கலை அறிவித்து உள்ளது.இது குறித்து, சட்ட பல்கலையும், இந்திய நிறுவன செயலக அமைப்பும் இணைந்து, இரு தரப்பு மாணவர்களுக்கும் பல்வேறு பயிற்சிகள் அளிக்க உள்ளன. சட்ட பல்கலையில் எல்.எல்.பி., படிப்புடன் பி.காம்., ஐந்து ஆண்டு படிப்பு தேர்வில், முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு, இந்திய நிறுவன செயலக அமைப்பின் சார்பில் தங்க பதக்கம் மற்றும் விருது வழங்கப்படுகிறது.
மேலும், அவர்கள் சி.எஸ்., 'எக்ஸ்கியூட்டிவ்' படிப்பில் சேர, பதிவு கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. இத்தகவலை, அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் சந்தோஷ்குமார், இந்திய நிறுவன செயலக அமைப்பின் தென் மண்டல தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Saturday, November 6, 2021
சி.எஸ்., படித்தவர்கள் பிஎச்.டி., சேரலாம்
Tags
# Education
# Ph.D
உடனுக்குடன் கல்விச்செய்திகளுக்கு
Click Here To Join Telegram Channel For Free
Click Here To Join Telegram Channel For Free
Ph.D
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment