கடந்த வருடம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, உலக மக்கள் விழிபிதுங்கி போனார்கள்.. இந்தியாவையும் தொற்று விட்டுவைக்கவில்லை.
*இலவச கோதுமை*
அதை தொடர்ந்து, மார்ச் 26-ம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது, பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண திட்டத்தை அறிவித்தார்... அதன்படி, "பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா" திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது.
*உணவு தானியம்*
மானிய விலை உணவு தானியத்துக்குமேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது.. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜுன் வரை மட்டும் இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இத்திட்டமானது, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டே வந்தது... இந்நிலையில், இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
*பேட்டி*
இதுகுறித்து மத்திய உணவுப் பொருட்கள் துறை செயலர் சுதான்ஷு பாண்டே செய்தியாளர்களிடம் சொன்னதாவது: நாடு முழுதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களுடன், கூடுதலாக இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது.. தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருகிறது.. வெளி சந்தையில் உணவுப் பொருட்கள் விற்பனையும் நன்றாக உள்ளது. எனவே, பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவுப் பொருட்கள் வழங்குவதை, நவம்பவர் 30க்கு பிறகும் நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை" என்றார்.
*உணவு தானியங்கள்*
இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாலும், வெளிச் சந்தையில் உணவு தானியங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாலும், கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட இலவச அரிசி அல்லது கோதுமை திட்டம், வரும் 30ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது என்ற உத்தரவு ஏழை மக்களுக்கு ஏமாற்றத்தை தந்து வருகிறது. அதேசமம், இந்த ஒன்றரை வருட காலமாகவே, இலவச அரிசி அல்லது இலவச கோதுமை வழங்கியது, மக்களுக்கு மிகப்பெரிய அளவில் வாழ்வாதாரமாக அமைந்து வருவதை மறுக்க முடியாது.

No comments:
Post a Comment