இன்ஜி., கல்லுாரிகளில் அட்மிஷன் நவ., 30க்குள் முடிக்க அறிவுறுத்தல் - Daily Dhuniya

Breaking

Saturday, November 6, 2021

இன்ஜி., கல்லுாரிகளில் அட்மிஷன் நவ., 30க்குள் முடிக்க அறிவுறுத்தல்

இன்ஜி., கல்லுாரிகளில் அட்மிஷன் வரும் 30க்குள் முடிக்க அறிவுறுத்தல் சென்னை:இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு காலியிடங்களை நிரப்ப, வரும் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, அக்., 15 முதல் நேரடி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இன்ஜினியரிங் படிப்பில், தனியார் நிகர்நிலை பல்கலைகளில் மாணவர் சேர்க்கை முடிந்து, வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ஆன்லைன் வழி கவுன்சிலிங்கில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மொத்தம், 1.52 லட்சம் இடங்களில், 95 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, 57 ஆயிரம் இடங்கள் காலியாகியுள்ளன.இந்நிலையில், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களை, வரும், 30க்குள் நிரப்பி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., இந்த அவகாசத்தை வழங்கியுள்ளது. மேலும், 'இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 15ம் தேதி முதல் ஒருங்கிணைப்பு வகுப்புகளை துவக்க வேண்டும். 'வரும் 30ம் தேதிக்குள் அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாட வகுப்புகளையும் துவக்கி விட வேண்டும்' என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment