'தலைவராக, முதலில் ஏதேனும் ஒரு துறையில் சாதியுங்கள். அதற்கு கடினமாக உழைக்க வேண்டும். நன்கு படிக்க வேண்டும்,'' என, மாணவ, மாணவியருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி., அறிவுரை வழங்கினார்.
தமிழக கவர்னர் மாளிகையில் நேற்று முன்தினம், 'பழங்குடியினர் பெருமை தின விழா' கொண்டாடப்பட்டது. விழாவில், சுதந்திர போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டா உருவப்படத்திற்கு, கவர்னர் ஆர்.என்.ரவி., மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின், தமிழகத்தில் உள்ள, எட்டு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது:
உயர் பதவியில் உள்ள பழைய மாணவர்களை அழைத்து, தற்போதைய மாணவர்களுடன் பேச வைக்க வேண்டும். அவர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், இப்பணியை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களே, உங்களின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. அதை வடிவமைக்கும் பொறுப்பு உங்களுடையது. இதில், ஆசிரியர்களுக்கும் பங்கு உண்டு. கடினமாக உழையுங்கள்; நன்கு படியுங்கள். உங்கள் பெற்றோருக்கு, உங்கள் ஊர் மக்களுக்கு உதவுங்கள்.
ஜம்மு - காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றி உள்ளேன். ஒவ்வொரு சவாலும், எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு. சவால் நம்மை உயர்த்தும். வாழ்க்கையில் சவால் இல்லை என்றால் உயர்வு இருக்காது; சவால்களை சந்திக்க வேண்டும். அப்போது தான் வளர்ச்சி அடைவோம்.நான் எங்கிருந்தாலும், என் பணியை சிறப்பாக செய்ய நினைப்பேன். என் பள்ளி பருவத்தில், என் ஆசிரியர்கள் எனக்கு ரோல் மாடலாக இருந்தனர். தமிழ் மிகவும் அழகான, பழமையான மொழி. இங்கு வந்த பிறகு, கற்றுக்கொள்ள துவங்கி உள்ளேன். நான் கவர்னராகவில்லை; ஜனாதிபதி மற்றும் பிரதமரால் கவர்னராக்கப்பட்டு உள்ளேன். இயற்பியல் ஆராய்ச்சியாளராக விரும்பினேன். லண்டனில் பணிபுரிந்தேன். அங்கிருக்க விரும்பாமல் தாயகம் திரும்பினேன். இங்கு வந்து சூழ்நிலை காரணமாக, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்றேன்.
நீங்கள் எந்தப் பதவிக்கு வர வேண்டும் என்றாலும், அதற்கான இலக்கு நிர்ணயித்து கடினமாக உழையுங்கள். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மிகப்பெரிய அளவில் சாதிக்கும் போது, மக்கள் உங்களால் கவரப்படுவர். தலைவராக விரும்பினால் முதலில் ஏதேனும் துறையில் சாதிக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் கூறினார்.
ஏகலைவா பள்ளி நுாலகங்களுக்கு, கவர்னர் புத்தகங்களை பரிசளித்தார். கவர்னர்கள் மாளிகையை மாணவர்கள் சுற்றிப் பார்த்தனர். இந்நிகழ்ச்சியில், கவர்னரின் செயலர் ஆனந்தராவ் பாட்டீல், பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment