கால்நடை படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - Daily Dhuniya

Breaking

Friday, October 8, 2021

கால்நடை படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகள் (பி.வி.எஸ்சி மற்றும் ஏ.எச்) கற்பிக்கப்படுகின்றன. அதேபோல், உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லுாரி, கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லுாரிகளில், உணவு தொழில்நுட்பம், கோழியின தொழில் நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் பட்டப்படிப்புகள் (பிடெக்) கற்பிக்கப்படுகின்றன. இவற்றில் 580 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களை நிரப்புவதற்கான 2021-22ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த செப்டம்பர் 9ல் தொடங்கியது. இந்நிலையில், பிவிஎஸ்சி, ஏஎச் மற்றும் பிடெக் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தகுதி உள்ள தமிழக மாணவர்கள் www2.tanuvas.ac.in மற்றும் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment